‘அசுர வேகத்தில் வந்த கார்’.. ‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரவிபத்து’.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Aug 20, 2019 12:45 PM
சாலையில் வேகமாக வந்த கார் மோதியதில் பலர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மொகத்திப்பூர் பஜார் பகுதியில் கார் ஒன்று சாலையில் தாறுமாறாக வந்துள்ளது. அப்போது சாலையின் ஓரமாக இரு சக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் 8 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனே விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
