இது என்ன ‘புதுசால்ல’ இருக்கு!... ‘பறக்க’ முடியாமல் ‘அவதிப்பட்ட’ ஆந்தை... பரிசோதனையில் தெரியவந்த ‘விநோத’ பிரச்சனை... ‘வைரலாகும்’ போட்டோ...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Feb 08, 2020 01:12 AM

இங்கிலாந்தில் விநோதமான பிரச்சனையால் ஆந்தை ஒன்று பறக்க முடியாமல் அவதிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Viral Owl Too Fat To Fly Put On Strict Diet Flies Off

இங்கிலாந்தில் உள்ள சஃபோக் ஆந்தைகள் சரணாலத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆந்தை ஒன்று பறக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளது. முதலில் ஆந்தைக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில், பின்னர் பரிசோதனையிலேயே பறக்க முடியாததற்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளது.

பரிசோதனையில், பறக்க இயலாத ஆந்தை 245 கிராம் எடை இருந்ததும், வழக்கமாக வளர்ந்த பெண் ஆந்தையின் சராசரி எடையை விட அது மிகவும் அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது. பொதுவாகவே விலங்குகள், பறவைகள் உடல் பருமன் நோயால் பாதிக்கப்படாத நிலையில், அந்த ஆந்தை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் அதிகளவில் எலிகள் இருந்ததும், அவற்றை அது அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு எடை அதிகமானதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு அந்த ஆந்தைக்குத் தேவையான டயட் சிகிச்சை அளிக்கப்பட்டு, சராசரி எடைக்கு வந்ததும் அது சுதந்திரமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது இந்த விநோத சம்பவமும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #OWL #DIET #PHOTO #VIRAL