'இந்த வயசுல இப்படியொரு டேலன்டா!... என்ன ஸ்டைலா ஓட்டுறாரு!... வைரல் தாத்தாவின் பொங்கல் வீடியோ'...
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்வயதான முதியவர் ஒருவர், தலையில் கரும்பை சுமந்து கொண்டு, கூடவே சைக்கிளும் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நம்மில் பெரும்பாலானோருக்கு, பொங்கல் கரும்பு வாங்கச் சென்றால் அதை சுமந்து கொண்டு வருவது, சிரமமானதாக இருக்கும். அதற்காகவே, அருகில் இருக்கும் ஏதாவது ஒரு இடத்தில், விலையைக் கூட பொருட்படுத்தாது கரும்பினை வாங்கிவிடுவோம். சிலர், அதைத் தூக்கி வர சோம்பேறித்தனப்பட்டு வாங்காமல் கூட வந்துவிடுவோம்.
இளைஞர்களே கரும்பினைத் தூக்கி வர சிரமப்படும் காலத்தில், வயதான முதியவர் ஒருவர் மிகவும் எளிமையாக தலையில் கரும்பினை சுமந்தவாறு வேகமாக சைக்கிள் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
கொளுத்தும் வெயிலில், எந்த வித பிடிப்பும் இல்லாமல், ஒன் மேன் ஆர்மியாக கரும்பு சுமந்து சைக்கிள் ஓட்டிய இந்த முதியவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Tags : #VIRAL #PONGAL