"என் அப்பா சொத்து எனக்கு தேவையில்ல!"... "வாடகை வீட்டில் தங்கி"... "வேலைக்கு நடந்து செல்லும்"... "சக்தி வாய்ந்த கோடீஸ்வரரின் மகன்!"...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Jan 30, 2020 01:15 PM

வாடகை வீட்டில் தங்கி, வேலைக்கு நடந்து செல்லும் மிகப்பெரிய செல்வந்தர் மகனின் வாழ்க்கை முறை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

russian billionaire son living in rented room and walks to work

வல்லாதிக்க நாடான ரஷ்யாவின் செல்வந்தவர்கள் பட்டியலில் 11வது இடத்தில் இருப்பவர், மிக்கெய்ல் ஃப்ரிட்மேன். அவரது 19 வயதான மகன், அலெக்சாண்டர் ஃப்ரிட்மேன், கடந்த ஆண்டு லண்டனில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளார்.

பெரும்பாலான செல்வந்தர்களின் வாரிகள், வெற்றிகரமான தந்தையின் தொழிலை அவருக்குப் பின் முன்னெடுத்துச் செல்வது தான் வழக்கம். ஆனால், அந்த வழக்கத்தில் இருந்து விலகி நிற்கிறார், ரஷ்யாவின் அலெக்சாண்டர் ஃப்ரிட்மேன்.

அலெக்சாண்டர் ஃப்ரிட்மேன், தனது தந்தையின் உதவியின்றி சொந்தக் காலில் நிற்க வேண்டும் என எண்ணி, ஐந்து மாதங்களுக்கு முன், சொந்தமாகத் தொழில் தொடங்கி செயல்பட்டு வருகிறார்.

இது குறித்து அவர் பேசுகையில், "என்னுடைய தந்தை அவர் சம்பாதித்த சொத்துகளை தான தர்மம் செய்ய இருப்பதாக சொல்லியிருக்கிறார். அதனால், அந்த சொத்துகள் யாவும் எனக்கு சொந்தமில்லை என்ற கருத்தோடு நான் வாழ்ந்து வருகிறேன். இப்போது நான் சொந்தமாக தொழில் தொடங்கி உள்ளேன். நான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து தான், சாப்பிடுகிறேன். என்னுடைய அலுவலகத்துக்கு நடந்து செல்கிறேன். வாடகை வீட்டில் தங்கியுள்ளேன்", என்று தெரிவித்துள்ளார்.

சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற இவரது எண்ணத்தை பல தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags : #MONEY #RUSSIA #WEALTH #SON