"இருய்யா கொஞ்சம் விளையாடிட்டு வர்றேன்..." பனியில் புரண்டு விளையாடிய 'சர்க்கஸ் யானை'... இணையத்தில் வைரலாகும் வீடியோ...
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவில் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட யானைகளில் ஒன்று அங்கிருந்த சாலைகளில் நிரம்பியிருந்த பனியில் புரண்டு விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஷ்யாவின் யாக்டெரின்பர்க் நகரில், இத்தாலிய சர்க்கஸ் நிறுவனம் ஒன்று சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த சர்க்கஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக கார்லா, ரன்னி ஆகிய 2 யானைகள் உள்ளன.
இந்த நகரில் சர்க்கஸ் நிகழ்ச்சியை முடித்து விட்டு, மற்றொரு நகரில் நடைபெற உள்ள சர்க்கஸ் கண்காட்சிக்கு செல்வதற்காக கார்லா, ரன்னி யானைகளை சர்க்கஸ் ஊழியர்கள் லாரிகளில் ஏற்ற முயன்றனர். ஆனால் யானைகள் வண்டியில் ஏற மறுத்தன. ஊழியர்களின் சொல் கேளாமல் கார்லா என்ற பெண் யானை சாலைக்கு சென்றது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலையில் உள்ள பனியில் முன்னங்கால்களை மடக்கி உட்கார்ந்த யானை பின்னர் புரண்டு விளையாடியது. இதை பலரும் வீடியோ எடுத்தனர். சில நிமிடங்கள் யானைகள் விளையாடிய பின்னர் ஊழியர்கள் அவற்றை வண்டியில் ஏற்றினர்.
