ஒரே ஓவரில் 6 ‘சிக்சர்கள்’ விளாசி... ‘தெறிக்கவிட்ட’ பேட்ஸ்மேன்... ‘வைரலாகும்’ வீடியோ...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jan 06, 2020 12:08 PM

நியூசிலாந்து உள்ளூர் டி20 தொடர் ஒன்றில் வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி அசத்தியுள்ளார்.

Video Leo Carter Smashes Six Sixes In An Over In T20 Match

நியூசிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் என்ற உள்ளூர் டி20 தொடர் ஒன்று நடைபெற்று வருகிறது. இதில் கேண்டர்புரி மற்றும் நார்தெர்ன் நைட்ஸ் ஆகிய அணிகள் நேற்று மோதியுள்ளன. முதலில் பேட்டிங் செய்த நார்தெர்ன் நைட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்களைக் குவித்துள்ளது.

அடுத்து விளையாடிய கேண்டர்புரி அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்துள்ளது. அந்த அணி வீரர் லியோ கார்டர் போட்டியின் 16வது ஓவரில் அனைத்து பந்துகளையும் சிக்சர்களாக விளாசி அசத்தியுள்ளார். லியோ கார்டர் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி 36 ரன்கள் குவித்த அந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

இதற்கு முன்னதாக கேரி சாபர்ஸ் (1968), ரவி சாஸ்திரி (1984), ஹெர்சேல் கிப்ஸ் (2007), யுவராஜ் சிங் (2007), ராஸ் ஒயிட்லே (2017), ஹஸ்ரத்துல்லா ஜஜாய் (2018) ஆகியோர் மட்டுமே இதுபோல ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

Tags : #CRICKET #YUVRAJSINGH #LEOCARTER #SIX #RAVISHASTRI #VIRAL #VIDEO