‘காவல் நிலையத்துக்குள் தீடீரென நுழைந்த’.. ‘கணவன், மனைவி செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘நெஞ்சை உலுக்கும் வீடியோ’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 29, 2019 01:14 PM

உத்தரப்பிரதேசத்தில் காவல் நிலைய வளாகத்திற்குள் தீயிட்டு தற்கொலைக்கு முயன்ற தம்பதியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Couple Set Themselves On Fire Inside Police Station In UP

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ஜோகிந்தர். அவருடைய மனைவி சந்த்ரா. இருவரும் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் நில ஆக்கிரமிப்பு கும்பல் ஒன்று அவர்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் இரு தரப்புக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதில் அந்த கும்பல் ஜோகிந்தரை கடுமையாக தலையில் தாக்கியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த ஜோகிந்தர் இதுகுறித்து சுரீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீஸார் அவருடைய புகாரை முறையாக விசாரிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து போய் இருந்த அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று திடீரென கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து உடனடியாக தீயை அணைத்த போலீஸார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 60 சதவிகித தீக்காயங்களுடன் தம்பதி சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுதொடர்பாக 3 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : #UTTARPRADESH #COUPLE #POLICESTATION #KEROSENE #FIRE #SHOCKING #VIDEO #DISTURBING