‘பச்சிளம் குழந்தையின் வயிற்றில் இருந்ததைப் பார்த்து..’ உறைந்து நின்ற டாக்டர்கள்.. ‘குடும்பத்தினர் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Aug 28, 2019 04:38 PM
நாகை மாவட்டத்தில் பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தைக்கு குடும்பத்தினர் வெற்றிலைச் சாறுடன் பாதரசத்தைக் கலந்து கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
நாகை மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த சரவணன் என்பரது மனைவி சுமித்ராவிற்கு கடந்த 16ஆம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் வயிறு வீங்கியது போல இருந்ததைப் பார்த்த மருத்துவர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது உடல்நிலை மிகவும் மோசமாகி குழந்தை கருப்பு நிறத்தில் வாந்தி எடுத்துள்ளது. பின்னர் குழந்தையின் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, அவர்கள் நாட்டு வைத்திய முறைப்படி குழந்தைக்கு வெற்றிலை சாறுடன் பாதரசத்தை கலந்து கொடுத்ததாகக் கூறியுள்ளனர்.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உயர் சிகிச்சைக்காக குழந்தையை உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு கடந்த 2 நாட்களாக குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது குழந்தை அபாய கட்டத்தை தாண்டியுள்ளது.