‘உலகக் கோப்பை’ துப்பாக்கி சுடுதலில்.. ‘தங்கம்’ வென்று ‘தமிழக வீராங்கனை’ சாதனை..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Aug 29, 2019 11:57 AM

பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

World Cup Indias Elavenil Valarivan wins gold in 10m Air Rifle

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி  நடந்து வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவான் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இறுதி போட்டியில் 251.7 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றுள்ளார்.

இதன்மூலம் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற 3வது இந்தியர் என்ற பெருமையையும் இளவேனில் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக இந்தியாவைச் சேர்ந்த அர்புவி சண்டேலா மற்றும் அஞ்சலி பகவத் ஆகியோர் மட்டுமே உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளனர்.

கடலூரைச் சேர்ந்த இளவேனில் ஏற்கெனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் தங்கம் வென்று சாதனை படைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags : #WORLDCUP #GOLD #ELAVENILVALARIVAN #AIRRIFLE #SHOOTING