‘சத்துள்ள மதிய உணவு வழங்குவதாகக் கூறி’.. பள்ளி செய்த காரியம்.. ‘வீடியோ வெளியானதால் உண்மை தெரியவந்த அவலம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 23, 2019 07:46 PM

உத்தரப்பிரதேசத்தில் சத்துணவுத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரொட்டியும், உப்பும் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

UP school serves Roti and salt as mid day meal probe ordered

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மதிய உணவில் சாதம், ரொட்டி, காய்கறிகள், பழங்கள், பால் ஆகியவையே வழங்கப்படும்.

ஆனால் மிர்சாபூர் மாவட்டத்திலுள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவாக ரொட்டியும், உப்பும் வழங்கப்பட்டு வந்துள்ளது. பள்ளியின் தரையில் அமர்ந்து மாணவர்களும் சாதாரணமாக ரொட்டியில் உப்பைத் தொட்டு சாப்பிடும் வீடியோ ஒன்று வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதில் சம்பந்தப்பட்ட மதிய உணவு திட்ட மேற்பார்வையாளரும், பள்ளி ஆசிரியரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

 

Tags : #UTTARPRADESH #GOVERNMENT #SCHOOL #NUTRITION #SCHEME #SHOCKING #VIDEO #ROTI #SALT