‘நம்பிச் சென்ற பள்ளிச் சிறுவனிடம்’.. ‘இளைஞர் கும்பல் செய்த அதிர்ச்சிக் காரியம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 31, 2019 11:38 PM

தஞ்சாவூரில் பள்ளிச் சிறுவனை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

Teen boy brutally raped by a gang in Thanjavur

தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே 9ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளிச் சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த கபிலன் என்ற இளைஞர் அருகிலிருந்த வயலுக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து அவர் சிறுவனை ஓரின சேர்க்கைக்கு உடன்படுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு சிறுவன் மறுக்கவே கபிலன் தனது நண்பர் 4 பேருக்கு ஃபோன் செய்து அவர்களையும் வயலுக்கு வரவழைத்துள்ளார்.

பின்னர் 5 பேரும் சிறுவனை தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து சிறுவன் தன் பெற்றோரிடம் கூற அவர்கள் உடனடியாக போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்பையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் கபிலன் மற்றும் அவரது நண்பர்கள் ஓம்பிரகாஷ், நிஷாந்த்குமார், ஆதவன், குபேந்திரன் ஆகியோரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags : #THANJAVUR #TEENBOY #SCHOOLSTUDENT #BRUTAL #GANGRAPE