‘திருமணத்திற்கு 8 நாட்களே உள்ள நிலையில்’.. வேலைக்கு கிளம்பிய.. ‘இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 23, 2019 02:15 PM

விழுப்புரத்தில் செல்ஃபோனில் பேசியபடியே ரயில் பாதையைக் கடக்க முயன்ற இளம்பெண் ஒருவர் அதிவிரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Vizhupuram woman talking on phone while crossing killed by train

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சின்ன நெற்குணம் பகுதியைச் சேர்ந்த ஜான்சிராணி என்பவர் தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வேலைக்கு புறப்பட்ட ஜான்சிராணி வழியில் செல்ஃபோனில் பேசிக்கொண்டே ரயில் பாதையைக் கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக சென்னை நோக்கி வந்த அதிவிரைவு ரயில் ஜான்சிராணி மீது மோதியதில் அவர் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி ஜான்சிராணிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளது அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #VIZHUPURAM #EXPRESS #TRAIN #WOMAN #MARRIAGE #DEAD