‘20 வருடங்களாக சிக்காத கொலையாளி’.. ‘அசால்ட்டாக’ செய்த ‘ஒரேயொரு சின்ன தவறால்’.. ‘மடக்கிப் பிடித்த போலீஸ்’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Aug 22, 2019 05:43 PM

அமெரிக்காவில் 20 வருடங்களாக தேடப்பட்டு வந்த கொலையாளி ஒருவர் வேலைக்கு விண்ணப்பித்ததன் மூலம் போலீஸாரிடம் பிடிபட்டுள்ளார்.

US Man Applied For Job Ended Up On Trial For 20 Year Old Murder

அமெரிக்காவின் புளோரிடாவில் 1998ஆம் ஆண்டு சோண்ட்ரா பேட்டர் என்ற 68 வயது மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் அவர் வேலை பார்த்துவந்த கடையில் இறந்து கிடந்துள்ளார்.  சோண்ட்ரா இறப்பதற்கு முன் இறுதியாக கடைக்கு ஒருவர் வந்துள்ளார் என்ற தகவலை வைத்து அந்த நபர்தான் இந்தக் கொலைக்கு காரணமானவராக இருக்க வேண்டுமென போலீஸார் அவரைத் தீவிரமாகத் தேடி வந்துள்ளனர். ஆனால் பல வருட தேடுதலுக்குப் பிறகும் போலீஸாரால் கொலையாளியைப் பிடிக்க முடியாமலேயே இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு பார்கெட் (51) என்ற நபர் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் பணிக்காக விண்ணப்பித்துள்ளார். அந்த வேலைக்கு அவர் தேர்வு செய்யப்பட்ட பிறகு அங்கு தன்னுடைய கை ரேகைகளை அவர் பரிசோதனைக்காக சமர்பித்துள்ளார். பார்கெட்டின் சமர்பிக்கப்பட்ட கை ரேகை 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த சோண்ட்ரா கொலையுடன் தொடர்புடைய கை ரேகையுடன் ஒத்துப்போயுள்ளது.

இதைத்தொடர்ந்து போலீஸாருக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் பார்கெட்டின் வீட்டிற்கு சென்று அவரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்துள்ளனர். சோண்ட்ரா கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த டிஎன்ஏ மாதிரியும் பார்கெட்டின் டிஎன்ஏ மாதிரியும் ஒத்துப்போயுள்ளது. இதையடுத்து தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கொலை நடைபெற்று 20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி ஒருவர் பிடிபட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #US #MURDER #JOB #APPLICATION #FINGERPRINTS #POLICE