“அந்த மருந்து சொர்க்கத்துல இருந்த வந்த பரிசு.. எங்களுக்கும் அனுப்பி வைங்க ப்ளீஸ்!”... இந்தியாவிடம் கேட்கும் ட்ரம்ப்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மலேரியா நோய்க்கு மருந்தாக ஹைட்ராக்சிகுளோரோகுயினை நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா அறிவித்ததையடுத்து அந்நாட்டு நிறுவனங்கள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு கொள்முதல் ஆணையங்களை வழங்கியிருந்தன. இதனிடையே ஹைட்ராக்சிகுளோரோகுயின் உட்பட பல்வேறு மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு மார்ச் 25ஆம் தேதி இந்தியா தடை விதித்தது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு, ஏற்றுமதி செய்வதற்கான கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்ட ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் இந்த மருந்தை சொர்க்கத்தில் இருந்து வந்த பரிசு என்றும் அதிபர் ட்ரம்ப் அந்நாட்டில் பேசும்போது குறிப்பிட்டுள்ளார். தேவைப்பட்டால் தானும் இம்மருந்தை உட்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.