'இருக்கு.. அடுத்த 5 நாள்ல இருக்கு!'.. தமிழ்நாடு வெதர்மேனின் ரிப்போர்ட்! இன்று தமிழகத்தில் பரவலான மழை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 06, 2020 01:25 PM

ஏப்ரல், 8,9-ஆம் தேதிகள் வரையிலான 4 நாட்கள் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர் மேன் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

Rainfall in TN for next 5 days,Says TN weather man

விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மழை பெய்துள்ளதாகவும், இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ள அவர், ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரையில் தென் தமிழகம் மற்றும் உள்தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், முன்காலையில் நல்ல வெயிலும் இருக்கும் என்றும்

குறிப்பிட்டுள்ளார்.  மேலும் கன்னியாகுமரி, நெல்லை, வால்பாறை சரக பகுதிகளில் இடியுடன் கூடிய மழை காணப்படுவதாகவும், அடுத்த 5 நாட்களில் அதிகபட்சமாக 35 மிமீ வரை மழை பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழகத்தில் தஞ்சாவூர் அதிராம்பட்டினத்தில் இன்று காலை 6.30 மணியில் இருந்து ஒரு மணிநேரம் வரை மழை பெய்தது.  தவிர, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்த தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடலோர பகுதியான கன்னியாகுமரியில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மித அளவிலான மழை பெய்தது.