'இப்படிப்பட்ட டைம்ல கூட இவங்க பண்ற விஷயம் இருக்கே' ... போலீஸ்காரரின் மனிதநேயத்தை பாராட்டி ... பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Apr 05, 2020 07:42 PM

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படும் மளிகை, காய்கறி கடைகள் போன்றவற்றை மட்டும் சில நேர கெடுபிடிகளுடன் செயல்பட அரசு அனுமதியளித்தது.

Yuvraj Singh tweets about the humanity of policers

ஊரடங்கு உத்தரவினால் இந்தியாவிலுள்ள தினசரி தொழிலாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். அதே போல ஆதரவில்லாமல் சாலையோரங்களில் வசிக்கும் மக்களும் உணவு எதுவும் கிடைக்காமல் பசியில் வாடி வருகின்றனர். சில பகுதிகளில் தன்னார்வலர்கள் சிலர்  தாங்களாக முன்வந்து உணவு பொருட்களை சாலையோரங்களில் உள்ள மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங் தனது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், பைக்கில் வந்த போலீசார் சிலர் சாலையோரம் ஆதரவில்லாமல் இருந்த முதியவர் ஒருவருக்கு தங்களின் உணவை பகிர்ந்து அந்த முதியவரின் பசியை போக்கியுள்ளனர். 'போலீசாரின் இந்த மனிதநேயம் மிக்க செயல் மனதை உருக்குவதாக உள்ளது. இதுமாதிரியான இக்கட்டான இந்த நிலையில் போலீசார்களின் இந்த செயலுக்கு தலை வணங்குகிறேன்' என யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளார்.

போலீஸ்காரர்கள் மனிதநேயம் மிக்க இந்த வீடியோவை அதிகம் பேர் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.