‘இதுவரை பாதிக்கப்படாமல் இருந்த திருச்சியில் 17 பேருக்கும் பெரம்பலூரில் ஒருவருக்கும் கொரோனா!’.. ‘120 பேர் மருத்துவமனையில் அனுமதி!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 05, 2020 10:49 AM

நேற்று ஒரே நாளில் திருச்சி மாவட்டத்தில் 17 பேர், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவர் என தமிழகத்தில் மொத்தம் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 

Trichy test positive case details திருச்சியில் கொரோனா பாதித்தவர்கள்

தமிழகத்தில் இதுவரை 485 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று வரை நோய் தொற்று உள்ளவர்கள் பட்டியலில் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட வாசிகள் இல்லாததால் கொஞ்சம் நிம்மதி அடைந்து இருந்தார்கள். ஆனால் திருச்சி மருத்துவமனையில் முதலில் நோய்த்தொற்று அறிகுறியுடன் உள்ளவர்களின் எண்ணிக்கை 8 ஆக இருந்த நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விபரம் அறிந்த பின் அந்த எண்ணிக்கை கூடியது. அதன் பின் திருச்சி ராமலிங்க நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் கண்டறியப்பட்ட நபர் என சேர்த்து மொத்தம் 74 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  முன்னதாக திருச்சியில் மட்டும் கொரோனா தொற்றினால் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது. இந்த 120 பேரை சோதனை செய்ததில் இவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தான் 29 பேருக்கான பரிசோதனையின் முடிவில் 17 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன் பின்னர் திருச்சியில் 17 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் உறுதி செய்தார் ‌. எனினும் மீதமுள்ள 60 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஏற்கனவே மதுரையைச் சேர்ந்த ஒருவரும், நேற்று விழுப்புரம் மற்றும் தேனியைச் சேர்ந்த இருவரும் உயிரிழந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்த ராமநாதபுரம் முதியவருக்கு கொரோனா தொற்று இருந்ததும் மற்றும் இன்று அதிகாலை கொரோனா சிகிச்சைப்பலனின்றி ஸ்டான்லி  சென்னையைச் சேர்ந்த முதியவர் உயிரிழந்ததும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர்.