'ஐபிஎல்' போட்டிகள் 'இந்த' தேதியில் தான் தொடங்குகிறதாம்... 'முதல்' போட்டியில் விளையாடப்போவது 'எந்த' அணி தெரியுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 30, 2019 11:15 PM

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் போட்டிகள் எப்போது துவங்கும் என்பது குறித்த தகவலை, டெல்லி அணியின் அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ்க்கு  (IANS) அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

IPL 2020 season likely to begin on March 29, Details here

அந்தவகையில் அடுத்த வருடம் மார்ச் 29-ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் துவங்குகின்றன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணி விளையாடவிருக்கிறது. அந்த அணியுடன் மோதப்போகும் அணி குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29-ம் தேதி தொடங்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க முடியாது. மேற்கண்ட நாடுகளுக்கு அந்த தேதிகளில் கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால் மார்ச் 31-ம் தேதிக்கு பின்னரே அந்த வீரர்கள் ஐபிஎல் அணிகளுடன் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.

விரைவில் ஐபிஎல் போட்டிகள் துவங்கும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.