ஒட்டிப் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்... 18 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை... ஆனந்த கண்ணீரில் மிதந்த தாய்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Dec 17, 2019 06:07 PM

பெரு நாட்டில் ஒட்டிப் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளை, அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக பிரித்து எடுத்துள்ளனர்.

mother told Christmas miracle as conjoined twins separated

பெரு நாட்டில் வசித்து வரும் ஷியோமாரா மோரலஸ் என்ற இளம் பெண்ணுக்கு கடந்த டிசம்பர் மாதம் சிசேரியன் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. ஆனால் அந்த குழந்தைகள் இருவரும் இடுப்புக்கு கீழே ஒட்டிய நிலையில், பிறந்ததால் மிகவும் கவலையடைந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், சான் போர்ஜாவில் (San Borja) உள்ள  நேஷனல் இன்ஸ்ட்யூட் ஆஃப் சில்ரன்ஸ் மருத்துவமனையில் (National Institute of Children's Health hospital) சேர்க்கப்பட்டனர். கிட்டத்தட்ட சுமார் 40 மருத்துவ வல்லுநர்கள் சேர்ந்து, குழந்தைகளை பத்திரமாக பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

18 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர், வெற்றிகரமாக இரட்டை ஆண் குழந்தைகளை பத்திரமாக பிரித்துள்ளனர் மருத்துவர்கள். அதன்பிறகு, 3 மாதங்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த குழந்தைகள் நலம் அடைந்ததால், கடந்த சனிக்கிழமை அன்று வீடு திரும்பியுள்ளனர். இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த தாய், தனது குழந்தைகளுடன் கொண்டாடும் முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை இது என்று துள்ளலுடனும், ஆனந்த கண்ணீருடன் கூறியுள்ளார். 

Tags : #TWINS #BABY