'உடம்பு' முழுவதும் 'பட்டாசை' சுற்றிக் கொண்டு... உடல் மேல் 'பெட்ரோலை' ஊற்றி... அதிகாரிகளை 'பதற' வைத்த நபர்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 13, 2020 11:04 AM

சீனாவில் பிறந்தநாள் பார்டிக்கு அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் விரக்தியடைந்த நபர் ஒருவர் தனது உடல் முழுவதும் பட்டாசை  சுற்றிக் கொண்டு, பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tension by the person who tried to burn the gasoline

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சீனா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாங் என்பவர் தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார்.  விருந்தினர்களுக்காக பல்வேறு விருந்துகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில், நிகழ்ச்சிகளுக்காக அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதற்கு முயன்றபோது, அனுமதி தர மறுத்து விட்டனர். இதனால் வாங் விரக்தியடைந்தார்.

வீட்டில் சோகமாக இருந்த அவர், சிறிது நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்தவராய், தனது உடல் முழுவதும் பட்டாசுகளை சுற்றிக் கொண்டு கையில் பெட்ரோல் கேனுடன் அனுமதி மறுத்த அதிகாரிகளின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது மார்பில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்தக் கொள்ள முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், சுதாரித்துக் கொண்டு விரைந்து செயல்பட்டு வாங்கை காப்பாற்றினர்.

இருப்பினும் தீ லேசாக பற்றிக் கொண்டதால் வாங்கிற்க சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தில்லை என்ற நிலையில் வாங் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : #CHINA #CORONA #VIRUS #WANG