'9 நாட்கள்' தாக்கு பிடித்தால் போதும்... 'கொரோனா' தானாகவே மடிந்து விடும்... 'வைரஸ்' குறித்த ஆராய்ச்சியாளர்களின் வியக்க வைக்கும் முடிவுகள்...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் 9 நாட்கள் மட்டுமே உயிரோடு இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் சுமார் 800-க்கும் மேற்பட்டோரை பலி வாங்கி இருக்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடிய தன்மை உடையது என்பதால் பலர் இந்நோயால் வேகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஹாஸ்பிட்டல் இன் பெக்சன் என்ற இதழில் கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் ஆய்வு மைய பேராசிரியர் கண்டர்கம்ப் ஆய்வு முடிவுகள் குறித்து கூறியுள்ளார்.
அதில் கொரோனா வைரஸ் சராசரியாக 4 முதல் 5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என்றும் குறைந்த வெப்ப நிலை, காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவை கொரோனா வைரசின் வாழ்நாளை அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். காற்றிலோ, தரையிலோ கூட 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு என்று பிரத்தியேக சிகிச்சை முறை எதுவும் கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், தற்போதைக்கு இந்த வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்வதே சாத்தியமான ஒரே வழி என்றும் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் காற்றில் பரவும் தன்மை உடையது என்பதால் வேகமாக பரவி வரவதாகவும் அவர் கூறியுள்ளார்.
