'எங்களுக்கு காதலர் தினம் எல்லாம் தெரியாது'... 'இல்ல கொண்டாட கூடாது'... இளைஞர்கள் செய்த வினோதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Feb 13, 2020 10:58 AM

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் இளைஞர்கள் சிலர் வினோத செயலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Valentine’s Day: Hindutava group marries dog to dog in Coimbatore

உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை(வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்கான கொண்டாட்டங்கள் தற்போதே களைக்கட்டத் தொடங்கிவிட்டது. இளைஞர்களும், இளம்பெண்களும் தங்களது காதலை வெளிப்படுத்தும் வண்ணம், தங்களுக்கு பிடித்தமானவர்களுக்குப் பரிசு பொருட்கள் கொடுப்பது வழக்கம். இதேகாரணமாகப் பல கடைகளில் காதலர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்கக் காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு தான் நடக்கிறது எனக் கூறி, கோவையில் உள்ள இந்து அமைப்பான பாரத் சேனா சார்பில், காதலர் தினத்தைக் கண்டித்து நாய்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

இதற்காக வீட்டில் வளர்க்கப்பட்ட ஆண் ஜெர்மன் ஷெப்பர்டு நாயும், பொமேரியன் பெண் நாயும் கொண்டு வரப்பட்டன. இரண்டு நாய்களுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் மங்கல நாண் இரண்டு நாய்களுக்கும் இடையில் வைக்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

Tags :