இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Feb 10, 2020 11:30 AM

1. வேளாண் பாதுகாப்பு மண்டலம் தொடர்பாக மத்திய அரசிடமிருந்து 4 நாட்களில் நல்ல பதில் கிடைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Tamil News Important Headlines Read Here For More February 10

2. சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 908 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் 2003ஆம் ஆண்டு உலகை உலுக்கிய சார்ஸ் வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

3. இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு மோசமான வானிலை காரணமாக சுமார் 2,038 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4. ஆந்திராவில் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாதுகாக்க திசா பெயரில் காவல் நிலையத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார்.

5. கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பவருக்கு 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்குவதாக நடிகர் ஜாக்கிசான் அறிவித்துள்ளார்.

6. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று தெரிவித்துள்ளார்.

7. ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற பின்னர் மைதானத்தில் வங்கதேச வீரர்கள் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து வெற்றிக்குப் பின் வீரர்கள் நடந்துகொண்ட விதம் துரதிர்ஷ்டவசமானது என வங்கதேச ஜூனியர் அணியின் கேப்டன் அக்பர் அலி வருத்தம் தெரிவித்துள்ளார்.

8. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு உதவத் தயார் என கடிதம் எழுதியிருந்த  பிரதமர் மோடிக்கு சீன அரசு நன்றி தெரிவித்துள்ளது.

9. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்டின் தொடர் நாயகனாக இந்தியாவின் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

10. டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஊழியருக்கு உதவிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

12. கொரோனா தொற்று பாதித்த சொகுசு கப்பலில் இருந்து தங்களைக் காப்பாற்றுமாறு இந்திய பணியாளர்கள் பிரதமர் மோடியிடம் வீடியோ மூலம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

13. மகாராஷ்டிராவில் ஒரு தலைக் காதலால் தீ வைத்து எரிக்கப்பட்ட கல்லூரி விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Tags : #CRICKET #KERALA #EDAPPADIKPALANISWAMI #ICCWORLDCUP #WEATHER #RAIN #NARENDRAMODI #CHINA #CORONA #SARS #ANDHRA #JAGANMOHANREDDY