"சீன அதிபர் 'ஜி ஜின்பிங்' எங்கே?..." "என்ன ஆனார்...?" "ரகசிய இடத்தில் தஞ்சமா...? கோபத்தில் கொந்தளிக்கும் 'சீன' மக்கள்...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம் புகுந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

3 வாரங்களுக்கு முன்பு பீஜிங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், அதன்பிறகு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. வைரஸ் பாதிப்பு குறித்து எந்த கருத்துக்களையும் அவர் வெளியிடவில்லை. அவர் என்ன ஆனார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்துள்ளது.
இந்த நிலையில் அவர் பாதுகாப்பான இடத்தில் ரகசியமாக தஞ்சம் புகுந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருடைய பணிகளை அவரது உத்தரவின் பேரில் பிரதமர் லீ கெக்யாங் கவனித்து வருகிறார்.
சமீபத்தில் லீ கெக் யாங் வுகான் மாகாணத்துக்கு சென்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டார். வைரஸ் பாதித்த சில நோயாளிகளையும் நேரில் சந்தித்து பேசினார். இது சீன மக்களிடம் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயத்தில் அதிபர் ஜிஜின்பிங் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் மத்தியில் தோன்றாமல் பாதுகாப்பான இடத்துக்கு சென்று விட்டது பொதுமக்களிடம் மட்டுமல்லாமல், அவரது கட்சியினரிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
