'கண்ணாடி' தடுப்புகளிடையே பறிமாறிக் கொண்ட 'அன்பு'... 'கொரோனா' மத்தியில் நெகிழ வைக்கும் 'காதல்' காட்சி...''வைரல் வீடியோ'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 09, 2020 08:37 AM

சீனாவில் கொரோனா வைரஸ் பீதி துரத்தியடிக்கும் சூழ்நிலையிலும், காதலர்கள் இருவர் தங்கள் அன்பை பறிமாறிக் கொணட காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Amidst the corona panic, two lovers show off their love

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்காக 24 மணி நேரமும் மருத்துவர்களும், செவிலியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் சீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ள ஹங்சூ நகரில் இயங்கி வரும் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும்  செவிலியர் ஒருவரை காண அவரது காதலர் வந்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக இருவரும் கண்ணாடி தடுப்புகளின் வழியே சந்திக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். எனினும் காதலியை கண்ட மகிழ்வில் நெகிழ்ந்த காதலர் கண்ணாடி தடுப்புகளின் வழியே முத்தமிட்ட காட்சி காண்போரை நெகிழச் செய்துள்ளது.

 

இந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸை வெல்லும் முயற்சியில் உறவுகளுக்கிடையேயான பாசப் போராட்டம் மன ரீதியிலான பாதிப்புகளையும் ஏற்படுத்தி விடுகிறது. இந்த போராட்டங்கள் அனைத்தையும் வென்று சீனர்கள் மீண்டு வருவார்கள் என பலரும் இணையத்தில் நம்பிக்கையுடன்  தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Tags : #CORONA #CHINA #HANGZHOU #VIRUS #LOVERS #VIRAL VIDEO