அமெரிக்காவில் 'லைட்' அடிச்சு கொரோனாவை விரட்டுறாங்க...! 'ட்ரெயின், பஸ்ன்னு எல்லா இடத்துலையும்...' அதிரடி பரிசோதனை...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | May 21, 2020 07:28 PM

அமெரிக்காவில் கொரோனா வைரஸை அழிக்க யுவிசி விளக்கு (UVC light ) வெளிச்சத்தை பயன்படுத்தி சோதனை செய்து வருகிறது அமெரிக்க அரசு.

UVC lamp to destroy coronavirus in the United States

கொரோனா வைரஸிற்கு அதிகாரப் பூர்வமாக இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில் அனைத்து நாடுகளும் நாள்தோறும் பல்வேறு பரிசோதனைகளையும், ஆய்வுகளையும் செய்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சுரங்கப் பாதை ரயில் நிலைய பகுதி உள்ளிட்ட இடங்களில் யுவிசி விளக்கு (UVC light ) வெளிச்சத்தின் மூலம் கொரோனா கிருமி அழிப்பு குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகளில் முதலிடத்தில் இருப்பது நியூயார்க். அதிக மக்கள் நெரிசல் கொண்ட பகுதியாக இருப்பதால் கொரோனா எண்ணிக்கையும் அதிகளவில் காணப்படுகிறது.

மேலும் அங்குள்ள காலி இடங்களிலும், சுரங்க பாதை ரயில் நிலைய பகுதிகளிலும், ரயில்கள், பேருந்துகளிலும்,  நியூயார்க் பெருநகர போக்குவரத்து ஆணையம் (New York Metropolitan Transportation Authority) டென்வரை சேர்ந்த புரோ லைட்டிங் நிறுவனம் தயாரித்த யுவிசி லைட்டுகள் மூலம் கொரோனாவை அழிக்கும் பரிசோதனையை நடத்தி வருகிறது. இதற்காக 150 யுவிசி  பிரிவுகளை அந்த ஆணையம் பயன்படுத்தி வருகிறது.

Tags : #LIGHT #US