“கொரோனாவைக் கண்டறிய உதவும் புதிய செயலி!”.. 'கூகுள், ஆப்பிள்' இணைந்து 'உருவாக்கிய' இந்த 'ஆப்' அப்படி என்னதான் செய்யும்?
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார்களா என்பதை மக்களுக்கு அறிவிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை கூகுளும், ஆப்பிள் நிறுவனமும் இணைந்து அறிமுகம் செய்துள்ளன.
ப்ளூடூத் அடிப்படையில் இயங்கக் கூடிய இந்த மென்பொருளை செல்போனில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஐஓஎஸ் ஸ்டோர் மூலம் தரவிறக்கம் செய்துகொண்டு வைத்துக்கொண்டால், இதே மென்பொருளை தரவிறக்கம் செய்து வைத்துள்ள வேறு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகும்போது, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தானாகவே அந்த தகவல்கள் நோட்டிபிகேஷனாக வந்து சேரும்.
இதை வைத்து தங்களுக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளதா என்பதை பயனாளர் உறுதி செய்து கொள்ள முடியும். அறிகுறிகள் இல்லாமல் கான்டாக்ட் ட்ரேஸிங் எனப்படும் சமூக பரவலை தடுப்பதற்கு இந்த செயலி அல்லது மென்பொருள் உதவும் என்று இந்த இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. எனினும் இந்த செயலி தற்போதைய சூழலில் பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பயன்பாட்டிற்காக முன்னுரிமை வழங்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அவர்களிடம் இதுபோன்ற ஒரு செயலி இருந்தாலும், அந்த செயலியில் நிறைய கட்டுப்பாடுகளும், போதாக்குறைகளும் இருந்து வந்த நிலையில் கூகுள் நிறுவனமும், ஆப்பிளும் இணைந்து அறிமுகம் செய்துள்ள இந்த காண்டாக்ட் ட்ரேஸிங் கருவி உதவிகரமாக இருக்கும் என்று சுகாதார ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.