"ஆர் யு ஓகே பேபி?".. லாக்டவுனில் விரக்தியில் இருந்த 'காதலிக்கு' சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய 'காதலன்!'.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்லாக்டவுனால், விரக்தியடைந்த தன் காதலிக்கு காதலன் கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுதும் அனைவரின் வாழ்க்கைமுறையையும் மாற்றிவிட்டது. உலகையே புரட்டிப் போட்ட இந்த கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மக்களின் அன்றாட பொழுதுபோக்கு அம்சங்களான பார்க், உணவகங்கள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதோடு அவர்களில் சிலரின் குதூகலமான சிந்தனையும் முடங்கி நாளடைவில் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அப்படி லாக்டவுனால் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த தனது காதலியை சந்தித்த காதலர் ஒருவர், காரில் இருந்து இறங்கி வரும் தன் காதலியிடம், “வா உன்னை திரையரங்கத்திற்கு அழைத்துச் செல்கிறேன்” என்று கூற, அவரோ, “லாக்டவுனில் எப்படி திரையரங்கத்திற்கு செல்லமுடியும்?” என்று கேட்கிறார். அப்போது தன் காதலியிடம் அந்த நபர் டிக்கெட் என்று அச்சிடப்பட்ட பேப்பரை கொடுக்கிறார். இதனால் ஆச்சரியமாகிய அந்த பெண், தன் காதலனுடன் நடந்து செல்ல, அவர் தன் காதலியை தன் வீட்டிற்குள் இருக்கும் திரையரங்கம் போன்ற செட் ஒன்றுக்குள் அழைத்துச் செல்கிறார்.
அங்கு முகப்பில் உள்ள ஒருவர் அவர்களுக்கு பாப்கார்ன் மற்றும் குளிர்பானம் கொடுக்கிறார். மால்களில் உள்ளதுபோலவே ஸ்கிரீன் 1, ஸ்கிரீன் 2 என்று இருக்கும் அந்த அறைகளுள், தனக்கான அறைக்குள் செல்கிறார் அந்த நபர். அங்கு தியேட்டரில்
@michaelandmarisa Suprised Marisa with an at home date night 🎥 🍿 💖 ##foru ##foryoupage ##fyp ##datenight ##bedroomcheck ##couple ##howto ##diy
♬ original sound - michaelandmarisa
இருப்பது போல விளக்குகளுடன் கூடிய சோபா செட் போடப்பட்டிருக்க, டிவியில் அந்த பெண்ணுக்கு பிடித்த படம் திரையிடப்படுகிறது. காதலிக்காக தனது வீட்டையே சினிமா தியேட்டராக மாற்றிய இந்த காதலின் செயல் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
