காபூல்: ‘கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் ’... ‘நிகழ்ந்த கோர சம்பவம்’... '14 பேருக்கு நடந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Nov 13, 2019 11:10 AM

ஆஃப்கானிஸ்தானில் இன்று காலை நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில், 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Seven killed after car bomb blast near Afghan in Kabul

தலைநகர் காபூல் அருகே உள்ள உள்துறை அமைச்சகம் மற்றும் விமானநிலையம் அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் சிறிதுநேரம் புகைமூட்டமாக காட்சியளித்தது. இந்த கார் குண்டுவெடிப்பில், 7 பேர் உயிரிழந்தநிலையில், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிகழ்கிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள், பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். தீவிரவாத அமைப்பிடமிருந்து அவர்களை காப்பாற்ற, அவர்களுக்கு பதிலாக, தலிபானை சேர்ந்த 2 தளபதிகள் மற்றும் ஹக்னி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் விடுவிக்கப்பட்டநிலையில், இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

Tags : #AFGHANISTAN #KABUL #CAR #ATTACK