‘மதுபோதையில் காரை ஓட்டிவந்த இன்ஜினியரால் கோர விபத்து’.. ‘செல்ஃபி எடுத்த இளைஞர்களுக்கு’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Nov 12, 2019 12:47 PM

மதுபோதையில் காரை ஓட்டிவந்த இன்ஜினியர் ஏற்படுத்திய விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Hyderabad Accident Drunk Software Engineer Rams Car And Kills Two

ஹைதராபாத்தைச் சேர்ந்த அபிலாஷ் (28) என்ற சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது நண்பர்கள் சிலருடன் ஒரு பார்ட்டி முடிந்து மதுபோதையில் காரில் சென்றுகொண்டிருந்துள்ளார். புதிதாக திறக்கப்பட்ட பாலத்தின்மேல் போய்க்கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அபிலாஷ் காரை ஓரமாக நின்றுகொண்டிருந்த 6 பேர் மீது மோதியுள்ளார்.

இதில் சாய் வம்சி, பிரவீன் என்ற 2 இளைஞர்கள் பாலத்திலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் ஓரமாக நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் சாலையோரம் இருசக்கரவாகனத்தை நிறுத்திவிட்டு செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்த ஒருவர் உட்பட 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்தியதும் காரை அங்கேயே விட்டுவிட்டு அபிலாஷும், அவருடைய நண்பர்களும் தப்பிக்க முயற்சித்துள்ளனர். அப்போது அபிலாஷை மடக்கிப் பிடித்த அங்கிருந்தவர்கள் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் அதற்குள் அவருடைய நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

Tags : #HYDERABAD #ACCIDENT #CAR #TWOWHEELER #DRUNK #PARTY #SOFTWARE #ENGINEER