‘விமானம் தீப்பிடித்து 41 பேர் பலியான விவகாரம்!’.. வெளியான பதறவைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Apr 16, 2020 01:21 PM

ரஷ்யாவில் கடந்த ஆண்டு மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து எரிந்த விமானத்தின் வீடியொ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

russia flight fire accident video released விமான விபத்து

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள விமான நிலையத்தில், விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்ததை அடுத்து விமானம் ஓடுதளத்தில் நெருப்பை பின்பக்கமாக உமிழ்ந்தபடி விபத்துக்குள்ளான காட்சிகள்தான் தற்போது வீடியோவாக வெளியாகி பலரையும் பதறவைத்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பல பயணிகள் பலரும் காயமுற்றனர். சில பயணிகள் விமானத்தின் அவசர வழியில் வெளியேறி தங்கள் உயிரை காத்துக்கொண்டனர். இது தொடர்பாக ரஷ்ய விமான போக்குவரத்து அமைச்சகம் நடத்திய விசாரணையில் மின்னல் தாக்கியது தெரிந்தும் விமானி அலட்சியமாக இருந்தது தெரியவந்தது. பின்னர் விசாரணை முடிவுக்கு வந்ததை அடுத்து வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.