'அமெரிக்காவை' கொரோனா ஆட்டிப்படைக்க... 'இவர்கள்' தான் முக்கிய காரணம்... வெளியான 'புதிய' தகவல்?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகளுக்கு சீனாவில் இருந்து வந்தவர்களே காரணம் என புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அதே நேரம் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான், பிரான்ஸ் போன்ற நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. மற்ற உலக நாடுகளை ஒப்பிடும் போது மேற்கண்ட நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. வல்லரசு நாடாகத் திகழும் அமெரிக்காவில் தற்போது வரை 10,980 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வெகுவேகமாக பரவியதற்கு சீனாவில் இருந்த வந்த 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் தான் காரணம் என அமெரிக்காவின் 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த பத்திரிக்கையில், '' சீனாவில் கொரோனா பரவியது குறித்து புத்தாண்டுக்கு முதல் நாளில் தான் சீனா உலக நாடுகளுக்கு அறிவித்தது. ஆனால் அதன் பிறகும் சீனாவில் இருந்து அமெரிக்கா வந்தவர்களை சுமார் 2 வாரங்களுக்கு அமெரிக்கா விமான நிலையங்களில் பரிசோதிக்கவில்லை. அதற்குள் சீனாவின் வுஹான் நகரில் இருந்து சுமார் 4 ஆயிரம் பேர் அமெரிக்காவுக்கு வந்து விட்டனர். ஜனவரி மாத மத்தியில் தான் அமெரிக்காவின் முக்கிய விமான நிலையங்களில் பரிசோதனை நடத்த ஆர்மபித்தனர். பிறகு தான் டிரம்ப் பயணத்தடை விதித்தார்.
அவர் தடை விதிப்பதற்குள், சீனாவில் இருந்து 1,300-க்கு மேற்பட்ட நேரடி விமானங்களில் 17 அமெரிக்க நகரங்களுக்கு 4 லட்சத்து 30 ஆயிரம்பேர் வந்து விட்டனர். அவர்களில், பயண தடை அறிவித்த பிறகு 2 மாதங்களில் வந்த 40 ஆயிரம் பேரும் அடங்குவர். வந்தவர்களில், அமெரிக்கர்கள் மட்டுமின்றி வேறு நாட்டினரும் கணிசமாக உள்ளனர். அவர்களை பற்றிய எந்த விவரங்களும் அமெரிக்க அரசிடம் இல்லை. அவர்களை கண்காணிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமெரிக்க அரசின் இந்த மெத்தனமே கொரோனா பரவிட காரணம்,'' என தெரிவித்து இருக்கிறது.
