'உயிர்' மேல துளியும் பயமில்ல..டிராவல் பேக்கிற்குள் 'சிரித்த' குட்டி தேவதை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Sep 17, 2019 01:21 PM

என்னதான் விமான நிலையங்களில் சோதனை செய்தாலும் அதனையும் மீறி கடத்தல் பொருட்களை துல்லியமாக கடத்தும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.இதனை உறுதிப்படுத்துவது போல சம்பவமொன்று அண்மையில் நடந்துள்ளது.

A 5 month old baby was kidnapped and carried to Dubai from Karachi

தலிவால் என்னும் ஐபிஎஸ் அதிகாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. துபாய் விமான நிலையத்தில் அதிகாரிகள் ஒரு டிராவல் பேக்கை பரிசோதனை செய்கின்றனர்.அதில் 5 மாத குழந்தை ஒன்று புன்னகையுடன் உள்ளே விழித்துக்கொண்டு உள்ளது.பாகிஸ்தான் நாட்டில் இருந்து விமானம் வழியாக இந்த குழந்தையை கடத்தி வந்துள்ளனர்.

 

அவ்வளவு நேரமும் எப்படி அந்த குழந்தை மூச்சு விட்டுக்கொண்டு அமைதியாக இருந்தது என்பது தெரியவில்லை. உள்ளே சிலபல பொருட்களை அள்ளிப்போட்டு அந்த குழந்தையை கடத்தி வந்துள்ளனர். ஒவ்வொன்றாக எடுத்து அந்த குழந்தையை அதிகாரி தூக்கும்போது அந்த குட்டி தேவதை அழகாக சிரித்துக்கொண்டு இருப்பதை பார்த்த, நெட்டிசன்கள் பலரும் அந்த குழந்தை பெற்றோர்களிடம் சேர வேண்டும் என பிரார்த்தித்து வருகின்றனர்.

Tags : #TWITTER #AIRPORT #BABY