'குடிச்சதும் இல்லாம.. இப்படியா அட்டூழியம் பண்ணுவாங்க?'.. பரபரப்பு சம்பவத்தை அரங்கேற்றிய போதை ஆசாமிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 23, 2019 09:22 PM

தேனி அருகே உள்ள பெரியகுளம் பகுதியில் மது அருந்திவிட்டு இரண்டு பேர் நடுரோட்டில் அமர்ந்து சாலை நடுவே பிரியாணி பொட்டலத்தை விரித்து வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Theni drunken men sat and ate biryani in the mid of NH

தேனி- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளைக் கோட்டை அருகே, வெள்ளை வேட்டி சட்டை அணிந்த ஒருவரும், அவருடன் இருந்த இன்னொருவரும் இணைந்து, பிரியாணி பொட்டலத்தை பிரித்து, பேருந்துகள் சென்றுகொண்டிருக்கும் சாலையின் நடுவே வைத்து உண்டுகொண்டிருந்துள்ளனர்.

இதனை வீடியோ எடுத்து, விஸ்வாசம் மற்றும் பேட்ட திரைப்படங்களின் பின்னணி இசையை பொருத்தி சிலர் இணையத்தில் பதிவேற்றியதை அடுத்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள இந்த போதை ஆசாமிகள் சுமார் 30 நிமிடங்கள் இவ்வாறு சாலையில் அமர்ந்து உணவு உண்டதாகவும் கூறப்படுகிறது.

Tags : #BIZARRE #DRUNK #THENI