‘6 மாசமா அப்பாகிட்ட பேசாத மகள்’ ‘மகள்கள் தினத்தில் தந்தை செய்த செயல்’ ..நெகிழ வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 23, 2019 02:58 PM

தன்னுடன் பேசாமல் இருந்த மகளின் வேண்டுகோளை ஏற்று தந்தை குளத்தை தூர்வாரிய சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

My daughter asked me to clean pond says father in Thiruvarur

திருவாரூர் மாவட்டம் மருதானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் பூக்கட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு விவேகானந்தன் என்ற மகனும், நதியா என்ற மகளும் உள்ளனர். சிவக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த மகள் நதியா தனது தந்தையுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

 தன்னுடன் பேசுமாறு சிவக்குமார் கெஞ்சிப்பார்த்தும் நதியா பிடிவாதமாக 6 மாதங்களாக பேசாமல் இருந்துள்ளார். இதனால் சிவக்குமார் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில், ‘உன்னிடம் பேச வேண்டுமானல் நான் என்ன செய்ய வேண்டும்..?’ என சிவக்குமார் தனது மகளிடம் கேட்டுள்ளார். உடனே தான் படிக்கும் பள்ளிக்கு பின்னால் இருக்கும் குளம் மாசடைந்துள்ளதால் மாணவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். அதனால் ‘அந்தக் குளத்தை தூர்வாரிக் கொடுத்தால் உங்களுடன் பேசுவேன்’ என நதியா தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சர்வதேச மகள்கள் தினத்தில் அன்பு மகளின் கட்டளையை சிவக்குமார் நிறைவேற்றியுள்ளார். மேலும் இனிமேல் மது அருந்துவது இல்லை என்றும், மனைவுடன் சண்டையிட மாட்டேன் என்றும் உறுதியளித்துள்ளார். இன்றைய நவீன உலகில் செல்போனுக்குள் மூழ்கி இருக்கும் குழந்தைகளுக்கு மத்தியில் நதியாவின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Tags : #THIRUVARUR #DAUGHTER #FATHER #POND