பூஜையின் போது மர்ம பொருள் வெடித்து சாமியார் பலி..! பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 26, 2019 04:04 PM

பூஜை செய்த போது மர்ம பொருள் வெடித்து சாமியார் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A man died after a suspicious object exploded in Tiruvallur

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர் சாமியார் கோவிந்தராஜ். இவர் திருவள்ளூர் அடுத்த இறையாமங்கலத்தில் தனியாக வீடுகட்டி வசித்து வந்துள்ளார். அங்கு சித்த வைத்தியம், ஜோதிடம், சம்பிராதய பூஜைகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை கோவிந்தராஜ் வீட்டில் உள்ள அறை ஒன்றில் பூஜை செய்து கொண்டு இருந்துள்ளார். 

அப்போது திடீரென அறைக்குள் மர்ம பொருள் ஒன்று வெடித்துள்ளது. இந்த சத்தம் கேட்டு அவரது சிஷ்யை லாவண்யா என்பவர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது உடலில் தீ காயங்களுடன் கோவிந்தராஜ் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். இதைப் பார்த்த மக்கள் உடனே அவரை மீட்டு காரில் ஏற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள் கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் கோவிந்தராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் வெடித்த மர்ம பொருள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #TIRUVALLUR #MAN #DIED #SUSPICIOUSOBJECT #EXPLODED