'உறவினர் வீட்டுக்கு செல்லும்போது'... ‘திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்’... 'பதறிப்போன கணவன்-மனைவி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 18, 2019 01:48 PM

உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, சாலையில் திடீரென ஆம்னி வேன் தீப்பிடித்த எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

husband and wife went to the Omni van caught fire suddenly

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன்- சாருலதா தம்பதியினர்.  இவர்கள் தங்களது மாருதி ஆம்னி வேனில், சின்னமனூரிலிருந்து, திருப்பரங்குன்றத்தில் உள்ள உறவினரைக் காணச் சென்றுகொண்டிருந்தனர். தேசிய நெடுஞ்சாலையில், கூத்தியார் குண்டு என்ற இடத்தின் அருகில் ஆம்னி வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்ததால், தம்பதிகள் பதறிப் போயினர்.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அவர்கள் கண நேரத்தில், ஆம்னி வேனை உடனடியாக நிறுத்திவிட்டு, கதவை திறந்து வெளியேறினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எந்தவித காயமும் இன்றி, வெங்கடேசனும், சாருலதாவும் உயிர் தப்பினர். பின்னர் தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் வந்தனர். ஆனால் அவர்கள் வந்து சேர்வதற்குள், ஆம்னி வேனின் பெரும்பகுதி தீப்பிடித்து எரிந்துப்போனது. இருப்பினும் தீயணைப்புத்துறை வீரர்கள், ஆம்னி வேனில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #FIRE #ACCIDENT #MADURAI