பேருந்தும் லாரியும் ‘நேருக்கு நேர்’ மோதி கோர விபத்து.. ‘நொடியில் தீப்பிடித்ததால்’.. வெளியேற முடியாமல் ‘35 பேர் பலி’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Oct 17, 2019 12:16 PM

சவுதி அரேபியாவில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 35 வெளிநாட்டுப் பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

Saudi Fire Accident 35 Foreigners Dead in Bus Lorry Crash

புனித நகரான மெதினாவில் இருந்து அரபு மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 35க்கும் அதிகமான பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. அல் அகால் எனும் கிராமம் அருகே ஹிஜ்ரா சாலையில் சென்றுகொண்டிருந்தபோது  எதிரே வந்த கனரக வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன. மோதிய வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் தப்பித்து வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கியுள்ளனர்.

இந்த பயங்கர விபத்தில் 35 வெளிநாட்டுப் பயணிகள் உயிரிழந்துள்ளதாவும், 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அறிந்து வேதனை அடைந்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர்  மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார்.

Tags : #SAUDI #BUS #ACCIDENT #FIRE #FOREIGNERS #DEAD #LORRY #ARAB #ASIAN #PILGRIMS #MEDINA