‘சுற்றுலா சென்ற இடத்தில்’.. ‘வேன் கவிழ்ந்து’.. ‘நொடிப்பொழுதில் நடந்து முடிந்த கோர விபத்து’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Oct 15, 2019 06:48 PM

ஆந்திராவில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Eight killed in tourist van accident in Andhras East Godavari

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலிருந்து சிந்துரு பகுதிக்கு சுற்றுலா வேன் ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. 13 பேர் பயணம் செய்துகொண்டிருந்த அந்த வேன் வால்மீகி கொண்டா பகுதி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.

இதைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயங்கர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சுற்றுலா சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ANDHRAPRADESH #TOURIST #VAN #ACCIDENT #EASTGODAVARI #DEAD