தரையிறங்கிய போது 'இரண்டாக உடைந்த விமானம்'... விமானத்தின் உள்ளே '177 பயணிகள்'... இணையத்தில் வெளியான வைரல் வீடியோ...
முகப்பு > செய்திகள் > உலகம்துருக்கியில் 177 பயணிகளுடன் தரையிறங்கி விமானம ஓடுபாதையைவிட்டு விலகி சாலையில் மோதியதில் இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது.
துருக்கியின் ஏஜியன் நகரில் இருந்து தலைநகர் இஸ்தான்புல் 'சபிகா காக்சன்' விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று 177 பயணிகளுடன் வந்தது. அந்த விமானம், இஸ்தான்புல் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக வேகமாக காற்று அடித்ததால் ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு வேகமாக தரையிறங்கியது.
பின்னர் ஓடுபாதையைவிட்டு விலகி சாலையில் மோதி நின்றது. மோதிய வேகத்தில் விமானம் இரண்டாக உடைந்தது. அத்துடன் விமானத்தின் உட்பகுதியில் தீப்பிடித்துக் கொண்டது.
மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக ஓடுபாதைக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தின் உடைந்த பகுதி வழியாக பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான விமானத்தின் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.