பாலியல் பலாத்காரம் பண்ணா உடனே திருமணம்?... இந்த கோக்குமாக்கான சட்டம்... எந்த நாட்டுல தெரியுமா?...
முகப்பு > செய்திகள் > உலகம்பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் அதே பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் வகையில் சட்டம் கொண்டுவர, துருக்கி அதிபர் எர்டோகன் அரசு முடிவு செய்துள்ளது.
மேற்காசிய நாடான துருக்கியில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடந்த, 2017ம் ஆண்டு மட்டும், 21 ஆயிரத்து, 957 சிறுமிகள் கர்ப்பமாகியுள்ளதாக ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. சிறுமிகள் மட்டுமின்றி, இளம் பெண்களும் பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர்.
இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க துருக்கி அரசு, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டால், அந்த பெண்ணையே, திருமணம் செய்துகொள்ள வழிவகுக்கும் சட்ட மசோதாவை, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற, துருக்கி அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த, 2016ம் ஆண்டு, துருக்கி நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எனினும், அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்ததை தொடர்ந்து, அந்த மசோதா திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில், அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற, எர்டோகன் அரசு, மீண்டும் முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம், பாலியல் குற்றம், குழந்தை திருமணம் ஆகியவற்றை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக, விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்தவே, இந்த மசோதாவை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக, துருக்கி அதிபர் எர்டோகன் கூறியுள்ளார்.