'சிவப்பாக மாறிய ஆறு...' 'இதனால தான் இப்படி ஆயிருக்கு...' 'பழையபடி மாத்துறது ரொம்ப ரிஸ்க்...' அதிருப்தியடைந்த நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு, ஆற்று நீர் முழுவதும் மாசடைந்த இரண்டு நாட்களுக்கு பிறகே கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டு அரசு மட்டுமில்லாமல் மக்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

ரஷ்யா நாட்டில் சைபீரியா மாகாணத்தின் நோரில்ஸ்க் நகரில் இருக்கும் மின் நிலையத்தில் உள்ள எண்ணெய் தொட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை தீடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த மின்நிலையம் உலகின் முன்னணி நிக்கல் மற்றும் பல்லேடியம் உற்பத்தியாளரான, நோரில்ஸ்க் நிக்கலின் துணை நிறுவனத்திற்கு சொந்தமானது எனவும் தெரியவந்துள்ளது. அந்த தொட்டியில் இருந்த சுமார் 20,000 டன் எண்ணெய் முழுவதும் அருகில் உள்ள அம்பர்ன்யா நதியில் கலந்துள்ளது.
ஆனால் இந்த கசிவு ஏற்பட்டு, எண்ணெய் முழுவதும் ஆற்றில் கலந்த இரண்டு நாட்களுக்கு பிறகு தான் அதன் பாதிப்பை கண்டறிந்த அதிகாரிகள் தற்போது ஆற்றில் கலந்துள்ள எண்ணெயை அகற்றும் பணியில் இறங்கியுள்ளனர்.
இந்த எண்ணெய் கசிவு 350 சதுர கிலோ மீட்டர் அளவிலான ஆற்றை மாசுபடுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் ஆம்பர்ன்யா நதி முழுவதும் எண்ணெய் கலந்துள்ளதால் அது சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது.
இதுகுறித்து பேசிய ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின், அதிகாரிகளின் கவனக்குறைவால் தான் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. எண்ணெய் கசிவை சீக்கிரம் கண்டுபிடித்திருந்தால் ஆறு முழுவதும் மாசடையும் நிகழ்வு நடந்திருக்காது. மேலும் எண்ணெய் கசிவை தாமதமாக கண்டுபிடித்ததற்கும் அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் என கண்டித்துள்ளார்.
மேலும் ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசு அளவை வைத்துப் பார்க்கும் போது நதியை தூய்மைப்படுத்துவது மிகவும் கடினம் என சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்த நோரில்ஸ்க் நிக்கல் நிறுவனம் 2016 ஆம் ஆண்டும் இதே போல் எண்ணெய் கசிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்து வருகிறது.

மற்ற செய்திகள்
