'ஃபிரிட்ஜ்' கண்ணாடி 'ஒடஞ்சு' போச்சு... அப்பா, அம்மாக்கு தெரிஞ்சா 'அவ்ளோ' தான்... மனதை 'நொறுங்க' வைக்கும் 'சிறுவனின்' விபரீத முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதியை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பூபாலன். இவரின் மனைவி உஷா. இந்த தம்பதிக்கு தஷ்வந்த் (11), பிரமோத் (9) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

வழக்கம் போல பூபாலன் மற்றும் உஷா ஆகியோர் வேலைக்கு சென்றுள்ள நிலையில் வீட்டில் தஷ்வந்த் மற்றும் பிரமோத் மட்டும் இருந்துள்ளனர். அப்போது இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து, வீட்டிலிருந்த ஃபிரிட்ஜின் கதவை தஷ்வந்த் திறந்துள்ளார். அப்போது ஃபிரிட்ஜ்ஜில் இருந்த கண்ணாடி ட்ரே, கை தவறி கீழே விழுந்து உடைந்துள்ளது.
இதனால் பயந்து போன தஷ்வந்த், சோகமாக இருந்துள்ள நிலையில், அம்மா, அப்பா வீட்டிற்கு வந்தால் நிச்சயம் என்னை அடிப்பார்கள் என தனது தம்பியிடம் கூறி அழுதுகொண்டே இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுவன், தற்கொலை செய்ய முடிவு செய்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தம்பி கழிவறை சென்று வரும் முன் அண்ணன் தஷ்வந்த் இந்த முடிவை எடுத்துள்ள நிலையில் வெளியே வந்த இதனைக் கண்ட பிரமோத் கதறி அழுதுள்ளார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த பெற்றோர்கள், சிறுவனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
சிறுவன் தஷ்வந்த், மிகவும் சுட்டிப்பையனாக இருந்த நிலையில் அப்பகுதியில் உள்ளவர்களிடம் அன்பாக பழகுவான் என்றும், அவன் இப்படி ஒரு முடிவு எடுத்ததை தாங்கி கொள்ள முடியவில்லை எனவும் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
