புதுமனை 'புகுவிழா'விற்கு சென்று திரும்பும் வழியில்... 'தப்பியோடிய' டிரைவர்... நொடியில் 'சிதைந்து' போன குடும்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி(40). இவர் அங்குள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்து வந்தார். மனைவி தங்கமணி(37) தட்டச்சு பணியாளராக வேலை செய்து வருகிறார். மகன் ரிதுரீஷ்(12) அங்குள்ள பள்ளியொன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

மூவரும் நேற்று நண்பர் ஒருவரின் புதுமனை புகுவிழாவிற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். அப்போது ஆனைக்கல்பாளையம் ரிங்ரோடு அருகே பின்னால் வந்த லாரியொன்று மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். அந்த வழியே சென்றவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்தது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மற்ற செய்திகள்
