'கொரோனாவால் அதிகம் பாதித்த 2வது நாடு!'.. 'அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 10 நாளில் கிடுகிடுவென உயர்ந்த எண்ணிக்கை!'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 13, 2020 03:03 PM

உலக அளவில் அதிகம் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது அந்நாட்டு அரசை நிலைகுலைய வைத்துள்ளது.

Russia now has second highest Covid19 cases in the world

கொரோனா பாதிப்பு உலக அளவில் 42 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், அமெரிக்காவில் அதன் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்கியுள்ளது. உயிரிழப்பை பொருத்தவரை அமெரிக்காவில் 83 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என சொல்லலாம். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி நாடுகள் அதிக கொரோனா பாதிப்புகளுடன் அடுத்தடுத்த வரிசையில் இருந்தன.

ரஷ்யாவை பொருத்தவரை, 5வது இடத்துக்கும் மேலாக இருந்த கொரோனா பாதிப்பு விகிதம், கடந்த 10 நாட்களாக நாளொன்றுக்கு 10 ஆயிரம் தொற்றுகள் உறுதியானதை அடுத்து, தற்போது ரஷ்யாவில் 2 லட்சத்து 42 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதும், இதில் 48 ஆயிரம் பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளதும் 2300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் கிடுகிடுவென அனைத்து நாடுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2வது இடத்தைப் பிடித்துள்ள நாடாக மாறியுள்ளது.