'எங்களுக்கு பாதுகாப்பு இல்ல!'.. மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்த டாக்டர்கள்... மர்மம் காக்கும் நாடு!.. பதறவைக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | May 05, 2020 08:03 PM

கொரோனா நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், டாக்டர்களுக்கே பாதுகாப்பு இல்லை எனவும் எச்சரித்து மூன்று டாக்டர்கள் மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்துள்ளனர்.

no medical security in hospitals says russian doctors

ரஷ்யாவில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்று முன்னணி சுகாதாரப் பணியாளர்கள்  மருத்துவமனை ஜன்னல்களிலிருந்து மர்மமான முறையில் விழுந்து உள்ளனர். இது கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பணி பாதுகாப்பு அச்சத்தை அளித்துள்ளது.

அந்த சுகாதாரப் பணியாளர்களில் இருவர் இறந்துவிட்டனர், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ரஷ்ய சட்ட அமலாக்க அதிகாரிகளால் விசாரிக்கப்படும் இந்த மூன்று சம்பவங்களும் ரஷ்ய பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் தீவிர விவாதத்தைத் தூண்டி உள்ளன.

தென்மேற்கு ரஷ்யாவின் வோரோனேஜ் நகரில் நோவஸ்மான்ஸ்கயா மாவட்ட மருத்துவமனையில் டாக்டர் அலெக்சாண்டர் ஷுலேபோவ் (37 ) ஆம்புலன்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். தற்கொலை முடிவை எடுக்கும் முன்னர் தமது சக மருத்துவர் ஒருவருடன் காணொலி ஒன்றை பதிவு செய்த அவர், தங்களை அதிகமாக வேலை வாங்குவதாகவும், பாதுகாப்பு கருவிகள் ஏதுமின்றி கொரோனா சிகிச்சைக்கு கட்டாயப்படுத்துவதாகவும், தங்களுக்கு கொரோனா உறுதியான பின்னரும் பணியில் தொடர கட்டாயப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆனால் டாக்டர் ஷுலேபோவ் கூறியது உண்மைக்கு புறம்பானது எனக் கூறி, அவரது சக மருத்துவரிடம் ரஷ்ய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், மருத்துவர்களுக்கே உரிய பாதுகாப்பு இல்லை எனவும் எச்சரித்து மூன்று டாக்டர்கள் மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.