'அடுத்த ஆட்டத்தை தொடங்கிய கொரோனா'... 'அமெரிக்காவை தொடர்ந்து நிலைகுலைந்த நாடு'...கதிகலங்கி போன மருத்துவர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | May 05, 2020 05:27 PM

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தனது கோர ஆட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், அங்கு இது வரை 1,45,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Coronavirus cases in Russia has risen by 10,581 over the past 24 hours

சீனாவில் தொடங்கிய கொரோனாவின் ஆட்டம் உலகத்தையே கதிகலங்க செய்து விட்டது. இந்த நிலையில் கொரோனா தற்போது அமெரிக்காவில் அதன் ருத்திர தாண்டவத்தை ஆடி வருகிறது. இந்தசூழ்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்திருந்த ரஷ்யாவில், அது தனது ஆட்டத்தை தற்போது தொடங்கியுள்ளது. அங்கு கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதன்படி அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. 

ரஷ்யாவில் புதிதாக 10,581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என்ன செய்வது என புரியாமல் நிற்கிறார்கள். வைரஸ் தொற்றுக்கு புதிதாக 76 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,356 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா மற்ற நாடுகளுக்கு பரவ தொடங்கிய போதே ரஷ்யா பல்வேரு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. தனது எல்லைகளை மூடியதோடு, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க  கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே தற்போது வேகமாக கொரோனா அங்கு பரவி வருவது ரஷ்ய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.