உலக ஆட்டிப்படைக்குற 'கொரோனா' வைரஸ்... 'இந்த' பாம்புல இருந்து தான் வந்ததாம்... ஷாக் ரிப்போர்ட்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Jan 24, 2020 06:00 PM

சீனாவில் உருவாகி இருக்கும் கொரோனா வைரஸ் காடுகளில் உள்ள வவ்வால்களை தின்ற பாம்புகளில் இருந்து உருவாகி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Snakes could be the source of the coronavirus, says report

கொரோனா வகை வைரஸ்கள் வரிசையில் இதுவரை 6 வகை வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த 6 வகை வைரஸ் மூலம் பரவும் நோய்களைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.

ஆனால் தற்போது சீனாவில் பரவி இருப்பது கொரோனாவின் 7-வது வகை புதிய வைரஸாகும். இந்த 7-வது வைரஸ் சற்று அதிக ஆக்ரோ‌ஷத்துடன் உள்ளது. இதனால் அதற்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்த மருத்துவர்கள் குழு, அதற்காக பல்வேறு விலங்குகள், பறவைகளை சோதித்து வருகிறது.

இதற்கு முன்பு பரவிய பன்றி காய்ச்சல், சார்ஸ் காய்ச்சல், ஜிகா வைரஸ் காய்ச்சல் ஆகியவை வவ்வாலில் இருந்து வந்து இருப்பதால், கொரோனா வைரசும் வவ்வால் மூலம்தான் பரவி இருக்கும் என்று சந்தேகப்பட்டனர். அந்த சந்தேகத்தின் அடிப்படையில்தான் முதல் கட்ட ஆய்வுகள் அமைந்தது. வவ்வாலுக்கும் கொரோனா வைரஸுக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை.

ஆனால் வவ்வால்களை காட்டில் வேட்டையாடி சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் வழியாக கொரோனா வைரஸ்கள் பரவி இருக்கலாம் என்றும், பாம்புகளை சீனர்கள் உணவாக உட்கொள்ளுவதால் இந்த வைரஸ் மனிதர்களுக்கும் பரவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து கட்டுவிரியன் மற்றும் நல்ல பாம்புகளில் இருந்து கொரோனா வைரஸ் எப்படி உருவாகிறது? என ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு விடை கிடைக்கும் பட்சத்தில் கொரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விடும்.

 

Tags : #SNAKE