'எஜமானை நோக்கி சீறி பாய்ந்த பாம்பு'...'ஒரு செகண்டில் நடந்த களேபரம்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jan 20, 2020 12:34 PM

தனது எஜமானரை தாக்க வந்த விஷ பாம்பை, வளர்ப்பு நாய்கள் சேர்ந்து கடித்து குதறிய சம்பவம், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Coimbatore : 3 Dogs saves owner from Snake Bite Video Goes Viral

கோவை ஒத்தகால்மண்டபம் அருகே உள்ள பூங்காநகரை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயம் செய்து வரும் இவர், சொந்தமாக ஒரு தோட்டம் வைத்துள்ளார். அந்த தோட்டத்தில் மாடுகளை வைத்து வளர்த்து வரும் ராமலிங்கம், தினமும் அதற்கு தீவனம் வைப்பது வழக்கம். அந்த வகையில் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக, நேற்று காலை தனது நண்பருடன்  நடந்து சென்றார். அப்போது அவர் வளர்த்து வரும் 3 நாய்களும் உடன் சென்றது.

அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென வழியில் 6 அடி நீளமுள்ள கொடிய வி‌ஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ராமலிங்கத்தை நோக்கி சீறி பாய்ந்தது. இதனை சற்றும் எதிர்பாராத ராமலிங்கம், அதிர்ச்சியில் பின்னோக்கி நகர்ந்தார். அப்போது உடன் வந்த நாய்கள் தனது எஜமானருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து பாம்பை நோக்கி சீறி பாய்ந்தது. பின்னர் 3 நாய்களும் சேர்ந்து பாம்பை கடித்து குதறி கொன்றது. இதனை ராமலிங்கம் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.

இதனிடையே தனது எஜமானுக்கு ஆபத்து என்றதும், உடனடியாக செயல்பட்டு வளர்ப்பு நாய்கள் பாம்பை கடித்து குதறி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #DOG #SNAKE #COIMBATORE #OWNER