1, வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதை கேப்டனாக இருந்தபோது தோனி மிகச்சரியாக கையாண்டார் என கிரிக்கெட் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.

2, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தரிசனத்தின்போது சுமார் 263 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.
3, ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
4, தந்தை பெரியாரின் கருத்துக்கள் கோபுரங்களில் வைக்கப்பட வேண்டியவை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
5, டெல்லி சட்டமன்ற தேர்தலை ஒட்டி, ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
6, பெரியார் பேரணி குறித்து ரஜினி பேசிய பேச்சு வைரலான நிலையில், ரஜினி தன் கருத்து குறித்து மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியிருந்தார். இதனையடுத்து #மன்னிப்பு_கேட்க_முடியாது என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
